சென்னையில் அடுத்தடுத்து 6 ஏடிஎம் மெஷின்களை உடைத்தவர் கைது
சென்னை அருகே உள்ள திருநின்றவூர் பிரகாஷ் நகரில் எஸ்பிஐ வங்கியின் 3ஏடிஎம் இயந்திரங்கள் , கனரா வங்கி ஏடிஎம் என 6 ஏடிஎம் இயந்திரங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தியிருந்தனர். ஏடிஎம் மெஷினின் தொடு திரைகள் உடைக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக திருநின்றவூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் சேசாத்திரி என்பவர் ஏடிஎம் மெஷின்களை உடைத்தாக காவல்நிலையத்தில் சரணடைந்தார். ஏடிஎம் மெஷினை உடைக்க பயன்படுத்திய சுத்தியலை கையில் எடுத்துவந்து தன்னை கைது செய்து சிறையில் அடைக்குமாறு போலீஸாரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸார் விசாரணையில், “திருநின்றவூர் பிரகாஷ் நகரை சேர்ந்தவர் சேர்ந்தவர் சேசாத்திரி (வயது 50), வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விரக்தியில் இருந்தவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். கடன் பிரச்னையால் தனக்கு சொந்தமான வீட்டை விற்றுள்ளார். வாழ பிடிக்காமல் மதுவே சரணாகதி என இருந்துள்ளார். இந்நிலையில்தான் இரவு 11 மணியளவில் பிரகாஷ் நகர் மெயின் ரோடு பகுதியிலுள்ள சுமார் 6 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
எஸ்.பி.ஐ வங்கிக்கு சொந்தமான 3 ஏடிஎம் மெஷின்கள், கனரா வங்கிக்கு சொந்தமான 1 ஏடிஎம், ஆக்ஸில் வங்கி ஏடிஎம், யூனியன் பாங்க் ஏடிஎம் மெஷின்களில் உள்ள தொடுதிரையை இரும்பு சுத்தியல் கொண்டு தாக்கியுள்ளார். அங்கிருந்து நேராக இரவு 1 மணியளவில் காவல் நிலையத்திற்கு வந்தவர். ஏடிஎம் மெஷின்களை உடைத்ததாக கூறியுள்ளார். மேலும் தான் செய்த குற்றத்திற்காக தன்னை சிறையில் அடையுங்கள் என காவலர்களிடம் கூறியுள்ளார். ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய சுத்தியலையும் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். சேசாத்திரியை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags :