கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை.

by Staff / 16-01-2023 02:39:15pm
கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை.

திருவட்டார் அருகே நெல்லிவிளை புத்தன்வீடு, இட்டகவேலி பகுதியை சேர்ந்தவர் குமாரசுவாமி. இவரது மகன் அனிக்குட்டன் (வயது 37), தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. அனிக்குட்டனுக்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று குமாரசுவாமி வெளியே சென்று பின்னர் வீட்டிற்கு வந்தபோது அனிக்குட்டனை காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலை யில் அனிக்குட்டன் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி அனிக்குட்டன் உடலை மீட்டனர். குமாரசுவாமி கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் பிணத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அனிக்குட்டன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo