தீப்பற்றி எரிந்த அரசுப்பேருந்து

by Staff / 06-05-2022 12:22:36pm
தீப்பற்றி எரிந்த அரசுப்பேருந்து

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் பயணிகள் உயிர் தப்பினர். மோர்பவானியில் இருந்து கபடா பகுதிக்கு 25 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ரிசர்வ் வங்கி சதுக்கம் அருகே பேருந்தின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. ஓட்டுரிமை எச்சரிக்கையினால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி உயிர் தப்பிய நிலையில் பேருந்து முழுக்க மளமளவென தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பேருந்து ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் பேருந்தில் இருந்த சுமார் 25 பயணிகளும் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர்.

 

Tags :

Share via

More stories