தெப்பத்திருவிழா பக்தர்களின் கூட்டத்திற்கு நடுவே கலெக்டர் கார் விஜய் ரசிகரின் அட்ராசிட்டி- பரபரப்பு.

by Editor / 11-02-2025 10:30:42pm
தெப்பத்திருவிழா பக்தர்களின் கூட்டத்திற்கு நடுவே கலெக்டர் கார் விஜய் ரசிகரின் அட்ராசிட்டி- பரபரப்பு.

உலகபிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெப்ப திருவிழா இரவு கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பக்குளத்தை சுற்றி சுவாமியை தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர்.இந்நிலையில் பக்தர்களின் கூட்டத்திற்கு நடுவே மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதாவின் கார் சென்றது. இதனால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளான நிலையில்  பக்தர்களின் கூட்டத்தின் நடுவே சென்ற மாவட்ட ஆட்சியர் சங்கீதாவின் காரின் முன்பாக விஜய் ரசிகர் ஒருவர் திடீரென  காரின் முன்பாக  தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை காண்பித்தவாறு நீண்ட நேரம் அங்குமிங்கும் குதித்துக் கொண்டே இருந்தார்.இதனைப் பார்த்த பக்தர்கள் சாமி கும்பிட வந்த இடத்திலும் அரசியல் பண்றாங்களே என வேதனையோடு புலம்பி சென்றனர்.

 

Tags : மதுரை தெப்பத்திருவிழா பக்தர்களின் கூட்டத்திற்கு நடுவே கலெக்டர் கார் விஜய் ரசிகரின் அட்ராசிட்டி- பரபரப்பு.

Share via