தொடர் விடுமுறை சிறப்பு பேரூந்துக்கள் இயக்கம்.

by Editor / 09-10-2024 09:10:54am
தொடர் விடுமுறை சிறப்பு பேரூந்துக்கள் இயக்கம்.

இந்துக்களின் புனிதபண்டிகைகளில் முக்கியமான பண்டிகைகளான ஆயுத பூஜை வருகிற 11ஆம் தேதியும், விஜயதசமி வருகிற 12ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் 1,715 சிறப்பு பேருந்துகள் இயக்க இருப்பதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது. அதன்படி இன்று (அக்.09) 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், நாளை (அக்.10) 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் என 2 நாட்களில் பயணம் செய்ய ஒட்டு மொத்தமாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : தொடர் விடுமுறை சிறப்பு பேரூந்துக்கள் இயக்கம்.

Share via