கலைத்திருவிழா மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்ற வடநத்தம்பட்டி பள்ளி மாணவி.

by Editor / 19-12-2022 10:24:09am
 கலைத்திருவிழா  மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்ற வடநத்தம்பட்டி பள்ளி மாணவி.

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவ மாணவியர்களிடம் உள்ள கலைத்திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக தமிழக
பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநிலம் முழுவதும்  கலைத் திருவிழா நடைபெற்றுவருகிறது.இதன்
ஒருபகுதியாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வட்டார அளவிலான போட்டிகள் நடைபெற்றது.இங்கு நடைபெற்ற போட்டிகளில் மெல்லிசை தனிப்பாட்டு போட்டியில் சங்கரன்கோவில் வட்டாரம் வடநத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்றுவரும் மாணவி மு.சுவாதி வெற்றி பெற்றார்.மேலும் வட்டார அளவில் தேர்வு பெற்ற சுவாதி அதன் பிறகு தென்காசியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டார்.மாவட்ட அளவில் தென்காசியில் நடைபெற்ற  மெல்லிசை தனிப்பாட்டு போட்டியிலும் வடநத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி மு.சுவாதி முதலிடம் பெற்று  தமிழ்நாடு மாநில அளவில்  நடைபெறும் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.

மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்ற மாணவி சுவாதிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பால்ராஜ்,இருபால் ஆசிரிய பெருமக்கள் , பள்ளியின் மாணவ மாணவியர்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo