வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகதமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை வாய்ப்பு.

by Editor / 11-06-2024 10:10:10am
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகதமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை வாய்ப்பு.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஜுன் 11) தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். குமரிக்கடல் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகதமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை வாய்ப்பு.

Share via