தமிழக அரசு சார்பில் ஊடகவியலாளர்கள்  540 பேருக்கு கொரோனா தடுப்பூசி 

by Editor / 06-07-2021 07:46:45pm
தமிழக அரசு சார்பில் ஊடகவியலாளர்கள்  540 பேருக்கு கொரோனா தடுப்பூசி 



தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசின் கொரோனா  நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான உண்மையான செய்திகளையும், கொரோனா நோய்த்தொற்றுக்  குறித்த விழிப்புணர்வு செய்திகளையும் பொதுமக்களுக்கு விரைவாகக் கொண்டு செல்லும் பணிகளை முன்களப் பணியாளர்களான பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மிகவும் சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறார்கள்.
 கால நேரம் பாராது, அல்லும் பகலும் அயராது உழைக்கும் அனைத்துப் பத்திரிகைத்துறை மற்றும் ஊடகத்துறையினர்களும் கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் தங்களது பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, செய்தித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவை  இணைந்து ஏற்பாடு செய்த கொரோனா நோய்த்தொற்றுத் தடுப்பூசி சிறப்பு முகாம்  சென்னை, கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது.  
இச்சிறப்பு முகாமினை  செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும்  இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது. 

 

Tags :

Share via

More stories