திமுக எம்.பி ஆ.ராசாவின் சொத்துகள் முடக்கம்

by Staff / 10-10-2023 04:00:40pm
திமுக எம்.பி ஆ.ராசாவின் சொத்துகள் முடக்கம்

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் சொத்துக்களை அமலாக்கத்துறை கையகம் செய்தது. கோவை ஷெல்டர் புரமோட்டர்ஸ் என்ற பினாமி நிறுவனத்தின் பெயரில் சொத்துக்கள் இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், ஆ.ராசாவின் பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ்-ன் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo