டூவீலர்கள் திருடிய பாஜ நிர்வாகிகளின் மகன்கள் கைது

மதுரை: கோ.புதூரில் சந்தேகிக்கும் படி இருந்த நபரை போலீசார் விசாரித்ததில் நாமக்கல் குமாரபாளையத்தை சேர்ந்த தினேஷ்வரன் என்பவர், அப்பகுதியில் டூவீலர்களை திருடியதாக தெரிவித்துள்ளார். அவற்றை குமாரபாளையத்தை சேர்ந்த இந்து முன்னணி நகர தலைவர் முருகனின் மகன் பாலாஜி, நகர பாஜக தரவு மேலாண்மை துணை தலைவர் சண்முகம் மகன் விவேக் பாலாஜி, வட்டமலை இந்து முன்னணி இளைஞரணி பொறுப்பாளர் முருகன் மகன் கவுதம் ஆகியோரிடம் விற்றுள்ளார். இதையடுத்து, 4 போரையும் போலீசார் கைது செய்து 13 வாகனங்களை கைப்பற்றியுள்ளனர்.
Tags :