தலைநகர் டெல்லியில் மதுபானங்களுக்கு தட்டுப்பாடு..?
கலால் துறையில் புதிய நடைமுறைகளையும், கொள்கைகளையும் அமல் படுத்த டெல்லி அரசு முயற்சி மேற்கொண்டது. இதன்காரணமாக டெல்லியில் செயல்பட்டு வந்த 475 மதுபான கடைகளில் சுமார் 468 கடைகளை இன்று முதல் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மதுக்கடைகளின் உரிமம் காலாவதி ஆவதை தொடர்ந்து இக்கடைகளில் ஏற்கனவே மதுபான கொள்முதல் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக மதுபானங்களுக்கு கடந்த சில நாட்களாக கடும் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில் இன்று முதல் இக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் தலைநகர் டெல்லியில் மதுபானங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
Tags : Shortage of liquor in the capital Delhi..?