ரஷ்யாவிடமிருந்து முடிந்த அளவுக்கு அதிகமான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்திய நிறுவனங்கள் திட்டம்
உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் ரஷ்யாவிடமிருந்து முடிந்த அளவு அதிகமான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்திய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போர் ஆரம்பித்த காலம் முதல் இதுவரை ரஷ்யாவிடமிருந்து 15 பில்லியன் பேரல் கச்சா எண்ணெயில் இந்திய நிறுவனங்கள் டாலர் அடிப்படையில் கட்டணமாக செலுத்தி இறக்குமதி செய்துள்ளனர்.
இந்த நிலையில் வழக்கமான டெண்டர் முறையில் இல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் அதிக சலுகை ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முனைப்புடன் உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு இடையே ஆன்ட்டி குளோபல் எனும் சந்தை ஆய்வு நிறுவனம் ரஷ்ய கச்சா எண்ணெய் பேரலுக்கு 33 டாலர் என்ற சலுகை விலையில் நிர்ணயித்துள்ளது அச்சுறுத்தலுக்கு காரணமாக
சரக்கு கப்பலின் போக்குவரத்து மற்றும் காப்பீடு கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில் முடிந்த அளவுக்கு அதிக சலுகை பெற இந்திய நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றனர்.
Tags :


















.jpg)
