பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் நீக்கக் கூடாது தேர்வுத்துறை உத்தரவு

by Editor / 01-11-2023 10:35:37pm
 பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் நீக்கக் கூடாது தேர்வுத்துறை உத்தரவு

தமிழகத்தில் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் நீக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவரின் பெயரை கட்டாயம் நீக்க வேண்டும் என்றால் முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதலை பெற வேண்டும் எனவும் பெயர் பட்டியலில் திருத்தங்கள், சேர்க்கை போன்ற விவரங்களை www.dge.tn.gov.inல் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்வினை எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை தயார் செய்யும் போது, 2023, மார்ச் மாதம் தேர்வு எழுதிய 11ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலைக் கொண்டே தயார் செய்யப்பட உள்ளது.

 

Tags : பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் நீக்கக் கூடாது

Share via

More stories

Logo