பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்.

by Editor / 14-11-2021 08:05:10pm
பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்.

 

கோவையில்  பிளஸ் டூ மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தனியார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி  ஒருவர்  தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில்  தனியார் பள்ளி ஆசிரியர்  மிதுன் சக்ரவர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் சிறைபடுத்தி  உள்ளனர்.
 
மேலும் இந்த விவகாரத்தை மூடி மறைந்த பள்ளி முதல்வரையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்தது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது பெற்றோர், உறவினர்களுடன் இணைந்து இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின், மாணவர் அமைப்பினர் கோவை  உக்கடம் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன  ஆர்பாட்டம் நடத்தினர்.

இதனிடையே பெங்களூரில் தலைமறைவாக இருந்த தனியார் பள்ளி  முதல்வர் மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்திருக்கின்றனர்.

 

Tags :

Share via