கோயம்புத்தூர் சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை பணியிடை நீக்கம்.

by Staff / 11-08-2025 09:41:01am
கோயம்புத்தூர் சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை பணியிடை நீக்கம்.

சென்னையில், ஆட்டோ ஓட்டுநர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரது உடலை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணற்றில் வீசிச் சென்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கில் திறன்பட செயல்படாத கோயம்புத்தூர் சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரையை பணியிடை நீக்கம் செய்து, டிஐஜி சசி மோகன் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags : கோயம்புத்தூர் சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை பணியிடை நீக்கம்.

Share via