மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

by Staff / 11-08-2025 09:35:39am
மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

இலங்கை கடற்படையால் கைதான ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ராமேஸ்வரத்தில் உள்ள 600க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. போராட்டத்தால் 20,000க்கும் மேற்பட்ட மீனவர்கள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்படி மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Tags : மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

Share via

More stories