கர்நாடகாவை கைப்பற்றப்போவது யார்..?

by Editor / 10-05-2023 09:06:16am
கர்நாடகாவை கைப்பற்றப்போவது யார்..?

கர்நாடகாவில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது சட்டசபை தேர்தல். மொத்தம் 224 தொகுதிகளிலும் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு  மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.மேலும் 2,430 ஆண்கள் மற்றும் 185 பெண்கள் என மொத்தம் 2,615 வேட்பாளர்கள்  கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் களத்தில் உள்ளனர்.இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறுகிறது.

 

Tags :

Share via