தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஏப்ரல் 13 ஆம் தேதி திட்டப்பட்டு இருந்த பிரச்சார நிகழ்வுகள் ரத்து
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஏப்ரல் 13ஆம் தேதி கும்முடிபூண்டி தொகுதிக்குட்பட்ட கவரப்பேட்டையில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது .ரத்து செய்யப்பட்ட இந்த பிரச்சாரம் மீண்டும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அதே கவரப்பேட்டை பகுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது ,காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்த போதிலும் நிர்வாக காரணங்களுக்காக இந்த பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக தெரிகிறது .கும்மிடிப்பூண்டி மட்டுமின்றி ஏப்ரல் ஒன்பதாம் தேதி கடலூரில் திட்டப்பட்டு இருந்த பிரச்சார நிகழ்வுகள் ரத்துக்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஏப்ரல் 19 ஆம் தேதி கும்பிடிப்பூண்டியில் வாக்கு சேகரிப்பார் என தெரிகிறது.
Tags :



















