காவல்துறையினர் தபால் வாக்குகளை ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பதிவு செய்யலாம் .

by Admin / 12-04-2026 02:53:51am
காவல்துறையினர் தபால் வாக்குகளை ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பதிவு செய்யலாம் .

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட உள்ள காவல்துறையினர் தபால் வாக்குகளை ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பதிவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது முதலில் அறிவிக்கப்பட்ட தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு தற்போது வரும் ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 காவல்துறை அதிகாரிகள் எளிதாக வாக்களிக்கும் வகையில் இதற்கான தனி தபால் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ஏற்கனவே தகுதி உள்ள சுமார் 18,000 காவல்துறையினருக்கு தபால் வாக்கு விண்ணப்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. வாக்களிக்க செல்லும் காவல்துறையினர் தங்களின் அடையாள அட்டை மற்றும் பணி ஆணை ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். தேர்தல் பணியில் இருக்கும் காவலர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

 

Tags :

Share via
Logo