பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலி

by Editor / 13-07-2026 04:27:31pm
பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலி

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை அருகே முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த கபீர் மற்றும் ஜன்னத் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Tags :

Share via

More stories

Logo