15 சவரன் நகைக்காக பெண் கொலை
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் நகைக்காக பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல், இட்லி மாவு விற்பனை செய்து வந்த வனஜாவை கொலை செய்துவிட்டு, அவரிடமிருந்த சுமார் 15 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றது. பின்னர் வீட்டை பூட்டிவிட்டு தப்பிய கும்பலை பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :


















