தமிழக முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சருடன் ஆலோசனை
தமிழக முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், நிதி அமைச்சர் மரிய வில்சன், நிதித்துறை செயலாளர் சித்திக் ,கல்வித்துறை செயலாளர் சந்திர மோகன் மற்றும் துறை சார்ந்த இயக்குனர்களுடன் ஆலோசனை. அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு காலநிலை அறிவியல் போன்ற புதிய பாடங்களை கொண்டு வருவது குறித்தும் கல்வியின் தரத்தை உலக தரத்தில் மேம்படுத்துவதற்கான கற்றல் திறனை மாணவர்களிடம் அதிகரிப்பதற்கான சூழல்கள் குறித்தும் சிங்கப்பூர் பின்லாந்து போன்ற நாடுகளுக்கு ஆசிரியர்களை அனுப்பி அங்குள்ள அரசு பள்ளிகளின் தரத்தை கண்டறிந்து அதற்கு இணையான கல்வியை தமிழக அரசு பள்ளிகளில் வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை வகுப்பது உச்சநீதிமன்றம் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு முக்கிய ம் என்று தீர்ப்பளித்ததின் காரணமாக தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பணியில் உள்ளவர்கள் தேர்வு எழுதாமல் பணியில் நீடிப்பவர்களின் தற்போதைய விபரங்கள் மற்றும் தரவுகள் ஆகியவற்றை முதலமைச்சரிடம் வழங்கப்பட்டதாகவும் வரும் நிதிநிலை அறிக்கை தொடரில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.
Tags :














.jpg)


