பெரம்பூர் சர்மா நகர் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்

by Admin / 13-07-2026 12:30:37am
 பெரம்பூர் சர்மா நகர் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்

இன்று மதியம் மூன்று மணியளவில் தன் சொந்த தொகுதியான பெரம்பூர் சர்மா நகர் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார். இவ்வலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளையும் மனுக்களையும் எளிதாக சமர்ப்பிக்கும் வகையில் நவீன வசதியுடன் கூடிய வளாகத்தில் இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கணினி வசதிகள் கூடிய 10 பணியாளர்கள் கொண்ட தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்நிகழ்வில் பொதுமக்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற அவர்களின் குறைகளை பதிவிடக்கூடிய புதிய செல் போன் செயலியையும் சுகப்படுத்தப்பட உள்ளது. அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய் தல பாதை முதலமைச்சர் ஆன தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. இன்று புதிய குடும்ப அட்டைகள் நிலப்பட்டாக்களை தொகுதி மக்களுக்கு முதலமைச்சர் வழங்க உள்ளார். இதனோடு அருகில் உள்ள நியாய விலை கடை மாநகர போக்குவரத்து கழக மின்சார பேருந்து மின்னூட்ட மையத்தையும் அவர் நேரில் பார்வையிட உள்ளார். பெரம்பூர் தொகுதியில் விளையாட்டு திடல் டயாலிசிஸ் மையங்கள் ஸ்மார்ட் பள்ளிகள் ஏரி மேம்பாட்டு திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo