ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ம.தி.மு.க.,கண்டன ஆர்ப்பாட்டடம்.

by Staff / 14-08-2024 04:13:33pm
ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ம.தி.மு.க.,கண்டன ஆர்ப்பாட்டடம்.

ஒன்றிய பாஜக  அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ் நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்தும், சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பத்து ஆண்டு காலம் ஒன்றிய பா.ஜ.க., அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகின்றது, 18-ஆவது மக்களவைத் தேர்தல் முடிந்து, தனிப் பெரும்பான்மை பலத்தை இழந்த பாஜ.க, கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. எனவே, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள ஒன்றிய பா.ஜ.க., அரசு, கடந்த ஜூலை 23-ஆம் நாள் தாக்கல் செய்த 2024-25 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் பீகார், ஆந்திர மாநிலங்களுக்கு நிதியை வாரி வழங்கி உள்ளது. ஆனால், தமிழ்நாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு 37 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் வைத்த கோரிக்கையை நிராகரித்த ஒன்றிய பா.ஜ.க., அரசு வெறும் 276 கோடி ரூபாய் மட்டுமே அளித்திருக்கிறது.

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ் நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்தும், சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆகஸ்டு 14-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டங்களின் தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதிமுக பொதுக்குழு தீர்மானத்தின் படியும் தலைவர் வைகோ  ஆணைப்படியும், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ  வழிகாட்டுதலிலும் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் வரும் 14.08.2024 அன்று காலை 10-மணிக்கு தென்காசி புதிய பேருந்து நிலையம்  முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர சதன்திருமலைக் குமார் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம உதயசூரியன் தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக தலைமை தணிக்கை குழு உறுப்பினர் சுரண்டை எஸ்.இராமகிருஸ்ணன், அவைத்தலைவர் என்.வெங்க டேஸ்வரன், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் அ.சுப்பையா,  குருவி குளம் ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்  தேவி ராஜகோபால், மாநில சொத்துப் பாதுகாப்பு குழு உறுப்பினர்  காசிராஜன், மாநில தீர்மான குழு உறுப்பினர் சுந்தரராஜன் வெளியீட்டுஅணி துணை அமைப்பாளர் நடுவை முருகன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் இசக்கியப்பன், பொதுக்குழு உறுப்பினர் ஏ டி நடராசன்,  மாவட்ட துணை செயலாளர்கள் எஸ் கே டி துரைமுருகன், ஆலங்குளம்  மருதச்சாமி பாண்டியன்,பொதுக்குழு உறுப்பினர்கள் காசிமேஜர்புரம் ரெங்கசாமி,  வே.பா  தங்கம் வெங்கடாசலபதி,  ஒன்றிய செயலாளர்கள் வாசுதேவநல்லூர் கிருஷ்ணகுமார், கீழப்பாவூர் வடக்கு இராஜபாண்டி பே.ஆறுமுகசாமி, தென்காசி கிழக்கு மாரிச்செல்வம்  மேலநீலிதநல்லூர் மேற்கு டாக்டர் ரவி,  குருவிகுளம் கிழக்கு ராஜகோபால் வடக்கு சீனிவாசன்,  தெற்கு செல்வகுமார், ஆலங்குளம் வடக்கு செல்வேந்திரன் தெற்கு அருள்ராஜ், தென்காசி மேற்கு வல்லம் சி.எஸ்.மணியன்,  சங்கரன்கோவில் தெற்கு சசி முருகன், கடையம் தெற்கு  சுந்தரம், மாவட்ட இணையதள ஒருங்கிணைப்பாளர் ரமேஸ், சங்கரன், மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் தேனம்மாள் கோபால், கீதா முத்துச்சாமி, சக்தி கோமதி சங்கர், கல்யாணி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன்,மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராஜாராம் பாண்டியன், துரை மோகன்ராஜ், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர்    நகர மதிமுக செயலாளர்கள் சுரண்டை பொன் மகேஸ்வரன், தென்காசி ஜி. கார்த்திக் , புளியங்குடி  ஜாகிர் உசேன், கடையநல்லூர்  கே எஸ் முருகன்,  முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் அ.சிவசுப்பிர மணியன்,  க.சிவசுப்பிர மணியன், பேரூர் செயலாளர்கள் குற்றாலம் வேல்ராஜ், இலஞ்சி முருகன், ஆயக்குடி கிருஷ்ணமூர்த்தி, வடகரைமுருகன், மேலகரம் வெங்கடாசலம், மாவட்ட பிரதிநிதிகள் மா .சத்யராஜ் ச.கலையரசன், வைகோராஜ், கலிங்கப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் அருண்குமார்,  இணையதள ஒருங்கிணைப்பாளர் வலசை கனகராஜ், பாசறை கணேசன், சுரண்டை மாணிக்கம், நடைபயணம் இராஜ கோபால், கோவிந்த பாண்டியன், மகாராஜா, திருமலை, திரவியம், அண்ணாத்துரை,  முருகன், தங்கச்சாமி, தங்கராஜ், சிவன் பாண்டியன், உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி நகர மதிமுக செயலாளர் ஜி கார்த்திக் அனைவருக்கும் நன்றி கூறினார்.

 

Tags :

Share via