புனித பரலோக மாதாவின் திருத்தல விண்ணேற்பு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்
கோவில்பட்டி, காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதாவின் திருத்தல விண்ணேற்பு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு
வீரமாமுனிவர் முதல் பங்கு தந்தையாக பணியாற்றிய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதாவின் திருத்தல விண்ணேற்பு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மேதகு ஆயர்கள் இவான் அம்புரோஸ்,யூஜின் ஜோசப் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்துஜெபமாலை தோட்டத்தில் இருந்து மக்கள் இசையுடன் இறைமக்களால் கொடி பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கொடி பட்டம் கட்டப்பட்டு இரவு 8 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் காலை மாலை நேரங்களில் திருவிழா திருப்பலி நற்கருணை பவனி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை புதுநன்மை விழாவும்,13ஆம் தேதி காலை மரியன்னை மாநாடும் 14ஆம் தேதி மாலை சிறப்பு ஆராதனை மற்றும் கூட்டு திருப்பலியும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக 15ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு திருவிழா திருப்பலியும் தேர் பவனியும் இறைமக்களின் கும்பிடு சேவையும் நடைபெற உள்ளது. கொடியேற்ற விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
Tags :