13-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை:சிறார்கள் உள்ளிட்ட 12 பேர் கைது.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்த 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் தாய், தந்தை என இருவரும் தினமும் காலையில் வேலைக்குச் சென்ற நிலையில், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.இதனை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், சிறுமியின் வீட்டிற்கு தண்ணீர் கேன் போடச் செல்வது போன்று சென்று, சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து பழகி வந்தான். ஒரு கட்டத்தில், சிறுமியை காதல் செய்வதாக ஆசை வார்த்தை கூறினான். அதனை உண்மை என்று நம்பிய சிறுமியும் அந்த சிறுவனிடம் பழகி வந்தாள். இந்த நிலையில், வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் அந்த சிறுவன், சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அத்துடன் தனது நண்பர்கள் சிலரையும் சிறுமியிடம் அறிமுகம் செய்து வைத்து, அவர்களையும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட வைத்துள்ளான்.
இதனால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமி, ஒரு கட்டத்தில் தனக்கு என்ன நேர்ந்தது என்ன என்று கூட தெரியாமல் தனிமையில் சோகமாக இருந்து வந்திருக்கிறார். இதனைக் கண்ட அவரது தாயார், சிறுமியை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.அங்கு மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்து பார்த்த போதுதான், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், இது குறித்து உடனடியாக மக்களிடம் விசாரிக்கவே அவர் அனைத்தையும் கூறியுள்ளார் இதனைத்தொடர்ந்து பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஏழு சிறுவர்கள் மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (19), சஞ்சய்(19), முடிச்சூரை சேர்ந்த சூர்யா (22), ஈசா பல்லாவரத்தை சேர்ந்த நிக்சன்(22) மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வாலிபர்களை சென்னை புழல் சிறையிலும், சிறார் களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் பல்லாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.
Tags : 13-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை:சிறார்கள் உள்ளிட்ட 12 பேர் கைது.