16-வது இந்திய- ஜப்பான் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்றது
16-வது இந்திய ஜப்பான் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்றது .இம்மா நாட்டின் சிறப்பு விருந்தினராக ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி கலந்து கொண்டார். இரு நாடுகளின் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி பேசுவையில், உலகளாவிய கூட்டாண்மையின் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என்றும் இந்த நிகழ்வை வர்ணித்தார். இம்மாநாட்டின் முக்கியமாக செமி கண்டக்டர்கள், அரிய வகை கனிமங்கள், மருந்துகள் மற்றும் தூய்மையான எரிசக்தி போன்ற துறைகளில் கூட்டு ஒத்துழைப்பை அதிகரிப்பது ;இந்தோ பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவதில் இரு நாடுகளும் ஒத்த கருத்துடன் இருந்து கடல் சார் பாதுகாப்பு, கடற்படை கூட்டு பயிற்சிகள், பிராந்தியத்தில் ஏகாதிபத்திய அச்சுறுத்தல்களை தடுத்தல் ஆகியவற்றோடு நவீன தொழில்நுட்ப பரிமாற்றம், விண்வெளி ஆராய்ச்சி, இந்தியாவில் ஜப்பானின் சிங்கன்சன் தொழில்நுட்ப அடிப்படையிலான புல்லட் ரயில் திட்டங்கள் ,தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வது; ஐக்கிய நாடுகள் சபையில் பாதுகாப்பு கவுன்சிலில் கட்டமைப்பு மாற்றங்களை கொண்டு வருவதற்கு இரு நாடுகளும் பரஸ்பர நிரந்த உறுப்பினர் பதவியை ஆதரிப்பதற்கும்முன்வந்தன.
Tags :



















