ரயில் பாதை பராமரிப்பு பணிகள் - ரயில் போக்குவரத்தில் மாற்றம்

by Editor / 30-07-2022 11:02:56pm
ரயில் பாதை பராமரிப்பு பணிகள் - ரயில் போக்குவரத்தில் மாற்றம்

சிவகங்கை - மேல கொன்னகுளம், திருப்பாச்சேத்தி - மானாமதுரை மற்றும்  சூடியூர் - பரமக்குடி ரயில் நிலையங்கள் இடையே ஆகஸ்ட் மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக 
 ராமேஸ்வரம் - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06652) ஆகஸ்ட் 1முதல் ஆகஸ்ட் 31 வரை வியாழக்கிழமைகள் தவிர ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.30 மணிக்கு 150 நிமிடங்கள் காலதாமதமாகவும், மதுரை - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06653) மதுரையிலிருந்து மதியம் 12.30 மணிக்கு பதிலாக மதியம் 01.10 மணிக்கு 40 நிமிடங்கள் தாமதமாகவும் புறப்படும். மேலும் திருச்சி - மானாமதுரை - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 4 வரை  சிவகங்கை - மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
திண்டுக்கல் - அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையே நடைபெறப்போகும் பராமரிப்பு பணிகளால் ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்ட் 31 வரை செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் கோயம்புத்தூர் - நாகர்கோயில் பகல் நேர விரைவு ரயில் (16322) 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும். இதே காலத்தில் சென்னை - குருவாயூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும்.
 

 

Tags : Track Maintenance Works – Change in Rail Traffic

Share via