ரூ.305 கோடி சொத்துமதிப்புள்ள பாஜக வேட்பாளர்

by Staff / 26-03-2024 01:48:49pm
ரூ.305 கோடி சொத்துமதிப்புள்ள பாஜக வேட்பாளர்

சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன் மற்றும் அவரது குடும்பத்துக்கு ரூ.305 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவநாதன் பெயரில் மொத்தம் ரூ.149.27 கோடி அசையும் சொத்துகள், ரூ.37.30 கோடி அசையா சொத்துகள், அவரது மனைவி பெயரில் ரூ.25.17 கோடி அசையும் சொத்துகள், ரூ.13 கோடி அசையா சொத்துகள், மகள்கள் ஹரிஷ்மா பெயரில் ரூ.39.61 கோடி அசையும் சொத்துகள், ரூ.50 லட்சம் அசையா சொத்துகள், ஹரினி பெயரில் ரூ.39.61 கோடி அசையும் சொத்து கள், ரூ.50 லட்சம் அசையா சொத்துகள் உள்ளன.

 

Tags :

Share via