தனியார் பேருந்து முன் விழுந்து பெண் தற்கொலை RDO விசாரணை.

by Editor / 18-07-2023 09:54:47pm
தனியார் பேருந்து முன் விழுந்து பெண் தற்கொலை RDO விசாரணை.

சேலத்தில்  தனியார் பேருந்து முன் தாய் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதுகுறித்து விசாரிக்க ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள  பிரட்ஸ் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் பாப்பாத்தி (வயது 39).இவரது கணவர் ஜெய்சங்கரை குடும்ப பிரச்சினை காரணத்தால் தனியே பிரிந்து  இரண்டு குழந்தைகளுடன் பாப்பாத்தி வசித்து வந்தார்.சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நல வாரிய அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாளராக பாப்பாத்தி பணியாற்றி வந்தார். பாப்பாத்தி சில நாட்களுக்கு முன்பு  சேலம் இரண்டாவது அக்ரஹாரம் பகுதியில் வந்த தனியார் பேருந்து முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். முதலில் பேருந்து மோதி பாப்பாத்தி இறந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. பின்னர் சிசிடிவி காட்சிகளை வைத்து சேலம் டவுன் போலீசார் பாப்பாத்தி பேருந்து முன் விழுந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதை  கண்டுபிடித்தனர்.இது தொடர்பாக முழு விசாரணை நடத்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.இதன் பேரில் தற்போது விசாரணை நடக்கிறது. இந்த நிலையில் பாப்பாத்தி ஏன் தற்கொலை செய்து கொண்டார்? குழந்தைகளின் கல்வி செலவிற்கு பணம் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா?   உண்மையான காரணம் என்ன ? என விசாரிக்க ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரையாடப்பட்டு உள்ளது. இதனையடுத்து சேலம் ஆர்டிஓ அம்பாயிர நாதன்  விசாரணை செய்து வருகிறார்.
 

 

Tags :

Share via

More stories