அனைத்து டாஸ்மாக்கிலும் காலி பாட்டில் பெறப்படும்
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, ஏப்ரல் முதல் தமிழகம் முழுவதும் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே வனப்பகுதிகளை ஒட்டியுள்ள டாஸ்மாக் கடைகளிலும், பின்னர் தருமபுரி, தேனி, நாகை, திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களிலும் சோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்தால் ரூ.10 திரும்ப வழங்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது. இதற்காக இம்மாத இறுதிக்குள் டெண்டர் பணிகள் முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. இதனால் பாட்டில் கழிவுகள் குறையும் என சமூக நல ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Tags :