மருத்துவமனையில் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்

பட்டிமன்றங்களின் மூலம் பிரபலமானவர் பாரதி பாஸ்கர். முன்னணி தனியார் வங்கியில் மிகப்பெரிய பொறுப்பு வகித்து வரும் பாரதி பாஸ்கர், தனது பிஸியான வாழக்கையிலும் பட்டிமன்ற பேச்சை விடாமல் சாலமன் பாப்பையாவின் குழுவில் பேசி வந்தார்.
பாரதி பாஸ்கர் சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சாலமன் பாப்பையா மற்றும் ராஜாவுடன் நேரில் சென்று சந்தித்திருந்தார்
.இந்த நிலையில், பாரதி பாஸ்கருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அனுமதித்துள்ளனர். பாரதி பாஸ்கருக்கு மூளைக்கு செல்லும் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், மருத்துவமனை தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
Tags :