கதிர் ஆனந்த் வழக்கு - 8 வாரங்களுக்கு தடை நீட்டிப்பு
2012 13-ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை, 2015ஆம் ஆண்டு தாக்கல் செய்ததாக கதிர் ஆனந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. 2016ம் ஆண்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய பின் ரூ.1.04 கோடியை செலுத்தியதாக வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கதிர் ஆனந்த் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறை அவகாசம் கோரியதால், மேலும் 8 வாரங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Tags :