பாஜக இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் - டி.கே.சிவகுமார்

by Staff / 27-04-2023 11:44:25am
பாஜக இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் - டி.கே.சிவகுமார்

கர்நாடகாவில் பாஜக இருக்கும் இடம் தெரியாமல் போய் விடும், கேரளா உள்பட தென்னிந்திய மாநிலங்களில் அதற்கு உள்ள மரியாதை என்னவென்று நமக்கு தெரியும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் மட்டுமல்லாமல், அனைத்து மக்களுமே மன தைரியத்தில் உள்ளார்கள் என்றார். காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு ஆட்சியமைக்கும் என்றும், கேரளா, தமிழ்நாடு, ஆந்திராவில் பாஜகவை வெளியே நிறுத்தியிருப்பது போல், கர்நாடகாவிலும் நிலை உருவாகும். கர்நாடகாவில் மூன்றரை வருடம் ஆட்சி செய்தும் அவர்களது அரசு படுதோல்வி என்று குறிப்பிட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo