பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்களை விடுமுறை
பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் பொருட்டு பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை தொடர்ந்து 5 நாட்களை விடுமுறையாக அறிவித்துள்ளது பள்ளி கல்வித்துறை. ஜனவரி 14 புதன்கிழமை போகிப் பண்டிகை, ஜனவரி 15 வியாழக்கிழமை தைப்பொங்கல், ஜனவரி 16 வெள்ளிக்கிழமை மாட்டுப்பொங்கல், ஜனவரி 17 சனிக்கிழமை உழவர் திருநாள் காணும் பொங்கல், ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை. இத்தொடர் விடுமுறையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட பள்ளி கல்வித் துறை வழிவகை செய்துள்ளது.
Tags :



















