எலக்ட்ரீஷியனுக்கு 4 ஆண்டுகள் சிறை

by Admin / 01-03-2022 04:33:24pm
 எலக்ட்ரீஷியனுக்கு 4 ஆண்டுகள் சிறை

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள பெரியேரி பகுதியை சேர்ந்தவர் காந்திசெல்வன். எலக்ட்ரீசியனான இவர் கடந்த 2015-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதுதொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தலைவாசல் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் காந்திசெல்வனை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற காந்திசெல்வனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

 

Tags :

Share via

More stories