கடலூர் துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
மாண்டஸ் புயல் காரணமாக கடலூரில் தரைக்காற்று வேகம் அதிகரித்துள்ளது. கடலோர பகுதிகளில் 60கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் 4-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
Tags :