12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

by Staff / 10-05-2024 01:54:26pm
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஈரோடு, சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
 

 

Tags :

Share via

More stories