திருப்பரங்குன்ற மலை மீது ஆதரவாளர்களுடன் செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கைது
திருப்பரங்குன்றம் மலை மீது பாஜக மூத்த தலைவர் எச். ராஜா அவரது ஆதரவாளர்களுடன் செல்ல முயன்ற போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று விட்டு அங்கிருந்து மழையின் உச்சியில் உள்ள தலவிருட்சமான கள்ளத்தி மரம் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய பகுதிக்கு எச். ராஜா செல்ல முயன்றார். அந்தப் பகுதி ஏற்கனவே மதரீதியான பதற்ற நிலை இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவிர்க்கவும் காவல்துறையினர் அங்கு கயிறு கட்டி தடுத்தனர் .தடையை மீறி செல்லமுயன்றதால் எச். ராஜா உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையின் போது உங்கள் வண்டியில் நான் ஏன் ஏற வேண்டும் என்றும் 1931 ஆம் ஆண்டு தீர்ப்பின்படி முழு மலையும் முருகனுக்கே சொந்தம் என்று கூறி எச்.. ராஜா போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.. கடந்த டிசம்பர் 2025-ல் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக வழக்கு முடிந்த நிலையில், எச் ராஜா திருப்பரங்குன்ற மலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags :


















