கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதி படுகொலையில் தனிப்படை போலீசார் எட்டு பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ரவுடி ஆதித்யன் என்கிற ஆதித்யன் படுகொலை செய்யப்பட்டார். ஆதித்யன் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ,மருத்துவமனை வளாகத்தில் இருந்தவரை இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பி ஓடியது. சம்பவம் குறித்து கீழ்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர் மருத்துவமனை போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதியில் நடந்த இந்த துணிகர கொலை பொது மக்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆதியை கொலை செய்தவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி எட்டு பேரை கைது செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
Tags :

















