அரசியலில் எதுவும் நடக்கலாம்; எதுவும் நடக்காமலும் போகலாம்-பாட்டாளி மக்கள் கட்சி  நிறுவன டாக்டர் ராமதாஸ்

by Staff / 12-01-2026 08:11:40pm
அரசியலில் எதுவும் நடக்கலாம்; எதுவும் நடக்காமலும் போகலாம்-பாட்டாளி மக்கள் கட்சி  நிறுவன டாக்டர் ராமதாஸ்

இன்று சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன டாக்டர் ராமதாஸிடம் திமுக கூட்டணியோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்களா .. அமைச்சர் ராஜகண்ணப்பன் சொல்லி உள்ளாரே என்று  கேட்கப்பட்ட கேள்விக்கு ஒவ்வொருவரும் அவரவர் எண்ணங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரசியலில் எதுவும் நடக்கலாம். நாங்கள் இன்னும் என் .டி. ஏ கூட்டணியில் தான் உள்ளோம் என்றார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் தங்களோடு கூட்டணி குறித்து மற்ற கட்சிகள் பேசி வருகின்றன என்று வெளிப்படையாக தெரிவித்து வருகின்றன.  அந்த வகையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி  நிறுவன டாக்டர் ராமதாஸ் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.  இந்த தகவல் குறித்த கேள்விக்கு டாக்டர் ராமதாஸ் அரசியலில் எதுவும் நடக்கலாம் எதுவும் நடக்காமலும் போகலாம் என்று தெரிவித்துள்ளதோடு யார் எதைச் சொன்னாலும் நான் என்ன சொல்கிறேனோ அதுதான் நடக்கும் என்றும் நாங்கள் இன்னும் என் .டி. ஏ கூட்டணியில் தான் உள்ளோம் என்றுசொன்னார். பாட்டாளி மக்கள் கட்சி 2026 சட்டமன்ற தேர்தல் வருகிற சூழலில் தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் காரணமாக  இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றன.  டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதிமுகவோடு கூட்டணி சேர்ந்து உள்ளார். டாக்டர் ராமதாஸ் இப்பொழுது திமுக கூட்டணியில் இணையலாம்  என்கிற பேச்சு பரவலாக அடிபட்டுக் கொண்டிருக்கின்றது. வடமாநிலங்களில் வலுவாக உள்ள ஒரு கட்சி இரு அணிகளாக பிரியும் பொழுது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவ இடங்கள் கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுகிறது.  இந்நிலையில் டாக்டர்.ராமதாஸ் அணிக்கு திமுகவில் மூன்று இடங்கள் ஒதுக்க உள்ளதாகவும் அவர்கள் உதய சூரியன்  சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று சொல்லப்பட்டதாகவும் தகவல். பாமக திமுக கூட்டணிக்கு வந்தால் விடுதலை சிறுத்தை கட்சி கூட்டணி குறித்து யோசிக்க வேண்டும் என்கிற கருத்தும் நிலவுகிறது.

 

Tags :

Share via