சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந் தர்மாதிகாரி

by Admin / 27-02-2026 10:26:09am
சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந் தர்மாதிகாரி

சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந் தர்மாதிகாரி நியமிக்க உச்ச நீதிமன்றக் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் இந்தப் பரிந்துரையை வழங்கியது. இவர் தற்போது கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.  தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மார்ச் 5, 2026 அன்று பணி ஓய்வு பெறுகிறார். எனவே, நீதிபதி தர்மாதிகாரி மார்ச் 6, 2026 முதல் சென்னை உயர் நீதிமன்றத்தின் 55-வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராய்பூரில் 1966-ல் பிறந்த இவர், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் 24 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றி 2016-ல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 

சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந் தர்மாதிகாரி
 
Tags :

Share via