குழந்தையின் சடலத்தை வணங்கிய பெற்றோர்
உத்திரபிரதேசத்தில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை வெளியே எடுத்து வழிபட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. அக்ஷாட் என்ற 3 வயது குழந்தை உடல்நலக்குறைவால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தது. அந்த குழந்தையின் உடலை பெற்றோர் புதைத்தனர். பின் கடந்த திங்கள் அன்று குழந்தையின் தாய்க்கு குழந்தை உயிருடன் இருப்பதுபோல் கனவு வந்துள்ளது. இதையடுத்து பெற்றோர் ஜோசியக்காரரை அணுகியுள்ளனர். அவர் குழந்தையின் சடலத்தை எடுத்து வணங்கினால் அந்த குழந்தை உயிருடன் வந்துவிடும் என கூறி இருக்கிறார். இதையடுத்து அந்த கிராமமே அந்த குழந்தையின் உடலை வணங்கி இருக்கிறது.
Tags :