இந்திய குடியரசுத்தலைவரானார் திரெளபதி முர்மு

இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்க குடியரசுத்தலைவர் மாளிகை யிலிருந்து ராம் கோவிந்வுடன் பாராளுமன்றத்திற்கு பாரம்பரிய குதிரை அணி வகுப்புடன் சென்றார் .21குண்டுகள் முழங்க வரவேற்பு வழங்கப்பட்டது .அங்கு அவரை சபாநாயகர் ஓம் பிர்லா, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா ,குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் வரவேற்று மைய அரங்கு மேடையில் அமர்ந்தனர் . தேசிய கீதத்தை அடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்துவைத்தார் .அதனைத்தொடர்ந்து புதிய குடியரசுத்தலைவராகப்பொறுப்பேற்ற திரெளபதி முர்மு முதல் உரையைத்தொடங்கினார். அவரைத் தொடர்ந்து வெங்கைய்யா நாயுடு குடியரசுத்தலைவர் உரையில் உள்ள சிறப்பு அம்சங்களை ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார் .பின்னர் நாட்டுப் பண்ணுடம் விழா நிறைவுற ,குடியரசுத்தலைவர் மேடையிலிருந் து இறங்கி பிரதமர் உள்ளிட் ட அமைச்சர்கள் பாராளும்ற உறுப்பினர்க ள் முதல் பெண் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் ,சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களையும் கைகுவித்து நன்றி தெரிவித்து குடியரசுத்தலைவர் மாளிகைக்கு புறப்பட்டார்.
Tags :