வேதாரண்யம் கடலோர கரைபகுதியில் ஒதுங்கிய படகு-போலந்து நாட்டு நபர் கைது

by Editor / 25-07-2022 11:00:41am
வேதாரண்யம்  கடலோர கரைபகுதியில்  ஒதுங்கிய படகு-போலந்து நாட்டு  நபர் கைது

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த முனாங்காடு பகுதியில் காற்று நிரப்பப்பட்டஇரப்பர் படகு கரை ஒதுங்கி நின்றது. தகவலின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல்குழும போலீசார் விரைந்து வந்து படகை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

கரை ஒதுங்கிய படகு 13 அடி நீளமும், 3 அடி அகலம் கொண்டதாகும். இந்த படகு சீனாநாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கையில் பயன்படுத்தப்படும் வாட்டர் பாட்டில்கள், துடுப்புகள், லைப் ஜாக்கெட், டிராவல் பேக், ஒரு ஜோடி காலணிகள் துடுப்பு ஆகியவை இந்த படகில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. தகவலறிந்த தஞ்சை சரக டி.ஜ.ஜீ கயல்விழி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், கப்பற்படை அதிகாரிகள், கடற்கரையில் கரை ஒதுங்கிய படகை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்த நிலையில் வேதாரண்யம் அடுத்த முனாங்காடு கடற்கரையில் ரப்பர் படகில் வந்து பதுங்கி இருந்த போலந்து நாட்டுகாரர் ஒருவரை  கைது  செய்து நாகை மாவட்ட எஸ்.பி  ஜவாகர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags :

Share via