நிதி நிறுவன மோசடி சுற்றி வளைத்த காவல்துறை

by Staff / 03-11-2022 11:18:24am
நிதி நிறுவன மோசடி சுற்றி வளைத்த காவல்துறை

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் டிப்பர் லாரி வாங்குவதற்காக போலி ஆவணங்கள் தயாரித்து அதன் மூலம் ரூ. 12 லட்சம் கடன் பெற்றதாக கிளை மேலாளர் ஜெய கண்ணன் காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்தார்.அந்த புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவு போலீசார் மயிலம் பகுதியைச் சார்ந்த ஏழுமலை, குமார், ஈஸ்வரன், கோபி கண்ணன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தற்போது இதில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கோபி கண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories