பா.ஜ.க புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் இன்று முறைப்படி பதவியேற்க உள்ளார்.

by Admin / 20-01-2026 12:17:33am
பா.ஜ.க புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் இன்று முறைப்படி பதவியேற்க உள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற வேட்பு மனு தாக்கல் மற்றும் பரிசீலையின் முடிவில் நிதின் நவீன் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்ததால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அவர் இன்று முறைப்படி பதவியேற்க உள்ளார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பீகார் சட்டமன்றத்தில் ஐந்து முறை உறுப்பினராக இருந்து உள்ள நிதின் நவீன் தற்பொழுது அமைச்சராகவும் உள்ளார். 45 வயதான அவர் அண்மையில் பாஜகவின் தேசிய செயல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜே.பி .நட்டா வகித்து வந்த இந்த பதவியை ஏற்கும் 13_ வது தேசிய தலைவர் ஆவார்.

 

Tags :

Share via