முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 55 பயனாளிகளுக்கு திட்ட பயன்கள்.

by Admin / 07-12-2025 01:24:26am
 முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 55 பயனாளிகளுக்கு திட்ட பயன்கள்.

 சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற முதலமைச்சர் தாயுமானவர் திட்டம் கல்வி ,சுயதொழில் மற்றும் அரசியல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 55 பயனாளிகளுக்கு அவர்களின் தேவைகளின் அடிப்படையில் திட்ட பயன்கள் மற்றும் நலிவுநிலை குறைப்பு நிதிக்கான காசோலைகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்..ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார கல்வி வளர்ச்சிக்காகவும் அவர்களின் பண்பாட்டு அடையாளங்களை பாதுகாக்கும் கடந்த நாலு ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் தொழில் முனைவோர்களாக வெளிநாட்டுக்கு சென்று உயர் கல்வி கற்க அவர்களுக்கென்று குடியிருப்புகள் கட்டி வாழ்க்கை தரம் மேம்பட நில உரிமை பெற என பெரும் திட்டங்களை வகுத்து அவர்களின் வாழ்வு மேம்படுத்துவதற்கான பணிகளை அரசு செயல்படுத்தியது .இதன் மூலம் சமத்துவ சமுதாயம் அமைப்பதற்கும் ஒரு வலிமையான உறுதிபாட்டை எடுப்பதற்கு அம்பேத்கரின் நினைவு நாளில் நாம் உறுதி ஏற்போம் என்று உரை நிகழ்த்தினார்.

 

Tags :

Share via