ரூ.6000 நிவாரணம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
ரூ.6000 நிவாரண உதவி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 17ஆம் தேதி சென்னை, வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார். 4 மாவட்டங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையால் இந்த மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.
Tags :