எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில் மீனவர்கள்: டிடிவி கண்டனம்
வடசென்னை கடற்பகுதிகளில் படர்ந்திருக்கும் ஆபத்தான எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி மீனவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.பங்கிங்காம் கால்வாய் மூலமாக வெளியேற்றப்பட்டு எண்ணூர் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும் மழைநீரில் CPCL நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் கலந்திருப்பதால் கடல்வளம் மட்டுமல்லாது பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
எர்ணாவூர், பிருந்தாவன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் படர்ந்திருக்கும் எண்ணெய் படலங்களால் சுவாசிக்கவே சிரமமாக இருப்பதாகவும், அதனை அகற்ற இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வடசென்னை பொதுமக்களையும், கடல்வளத்தையும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமல் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி உள்ளூர் மீனவர்களை ஈடுபடுத்தியிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதோடு, தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரும் 17ஆம் தேதிக்குள்ளாக எண்ணெய் படலங்களை அகற்ற வேண்டும்.தெலுங்கானாவில் சித்திப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அகுலா நரேஷ் (35) துப்பாக்கியால் தன்னையும் தனது மனைவிசைதன்யா (30) மற்றும் இரண்டு குழந்தைகள் மகன் ரேவந்த், மகள் ஹிமாஸ்ரீ ஆகியோரை சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :